
ஸ்ரீரங்கத்தில்
மணல் கடத்திய 2 பேர் கைது – வாகனம் பறிமுதல்
ஒருவர் தலைமறைவு.

திருவரங்கம் பஞ்சக்கரை ரோடு பகுதியில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்,
இது தொடர்பாக திருவளர்ச்சோலையைச் சேர்ந்த விஜய பாரதி , விஜயபாஸ்கர் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தப்பிச்சென்ற ரமணா என்பவரை தேடி வருகின்றனர்.

