Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழையில் பள்ளி சென்ற மாணவனின் கால் துண்டிப்பு. மருத்துவ செலவை ஏற்பாரா ? திருச்சி மாவட்ட கலெக்டருக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

0

'- Advertisement -

 

Ad banner

கடமையை செய்ய தவறும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் மழை அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியாளர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் இன்று திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவித்த நிலையில் மற்ற மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வரும் சூழ்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காத நிலையில் மாணவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே பள்ளிகளுக்கு சென்றனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வயநாடு கைகாட்டி அருகே அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர் தன்னுடைய பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் விபத்துக்குள்ளானதில் மாணவரின் கால் துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

விடுமுறை அறிவித்திருந்தால் மாணவன் வீட்டில் இருந்திருப்பான் , இந்த மாணவனின் மருத்துவ செலவை கலெக்டர் ஏற்பாரா ?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.