Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை.

0

'- Advertisement -

 

Ad banner

பெரம்பலூா் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருச்சி, ஸ்ரீரங்கம், கீழவாசல் கன்னியப்பன் தெருவைச் சோ்ந்தவா் வாவாசி மகன் பிரதீப் (வயது 23). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் தனது பாட்டி இந்திராணி வீட்டில் தங்கியிருந்தாா். கடந்த 23.7.2021- அன்று சிவன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாட்டி வீட்டுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாா்.

TVK ad

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பிரதீப்பை கைது செய்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் பிரதீப் வெளியே வந்தாா்.

இந்த வழக்கு, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும், தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அபராதத் தொகையில் ரூ. 50 ஆயிரம் வழங்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, பிரதீப்பை திருச்சி மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.