திருச்சி வாகன சோதனையில்
30 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்திய
3 பேர் கைது.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட பொருள்கள் கடத்திச் சென்று விநியோகம் நடைபெறுவதாக உணவு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மலைக்கோவில் பஸ் நிறுத்தம் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் மகாதேவன் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2
மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர் இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் பாக்கு, கூல்லீப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. சோதனையின்போது வாகனங்களில் வந்த 4 பேரில் ஒருவர் தப்பியோடிவிட்டார் மற்ற 3 நபர்களை பிடித்து புகையிலைப் பொருள்களுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சிக்கியவர்கள் அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த அப்துல்லா (வயது 45), ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்திர் குமார் (19), மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் ( 50 ) என்பது தெரியவந்தது.
பின்னர் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .