மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று திருச்சி திரும்பிய வீரர்களுக்கு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா .
திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா.
தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான 38வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024 வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை பெற்ற தடகள வீரர்களுக்கு தமிழ்நாடு சிறப்புப் படை எண் 1 அலுவலகத்தில் பாராட்டு விழா
இன்று சனிக்கிழமை திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் நடராஜ் , லாசர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
ஈரோட்டில் 19ம் தேதி முதல் 21.09.24 தேதி வரை நடந்த மாநில அளவிலான 38வது ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024 போட்டிகளில் திருச்சி மாவட்டம் சார்பில் 136 பேர் கலந்து கொண்டார்கள். இதில் 14 பேர் பல பிரிவுகளில் பதக்கங்கள் பெற்றார்கள்.
ஒட்டு மொத்த சாம்பியன் மாநில அளவில் 6 வது இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டத்திற்கு கோப்பை பெற்றார்கள் .
வெற்றி பெற்றவருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பாக திருச்சி மாவட்ட தடகள சங்க உபத்தலைவரும், தமிழ்நாடு சிறப்புப்படை காவல் பட்டாலியன்-1 கமாண்டன்ட் எம்.ஆனந்தன், நினைவு பரிசு வழங்கி பாராட்டினார் .
நிகழ்ச்சியிற்கு தடகள சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், லட்சுமணன், ஜீவானந்தம், தடகள வீரர்களின் பெற்றோர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.