திருச்சியில்
தனியார் நிதி நிறுவனத்தில் கவரிங் நகையை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடி.
2 பேர் அதிரடி கைது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பிரபல நிறுவனத்தின் நிதி நிறுவன கிளை அமைந்துள்ளது. இங்கு சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது கபீஷ் (வயது 26) திருச்சி பெரிய மிளகு பாறை பொதுத்தேர் பகுதியைச் சேர்ந்த ஆசிப் முகமது (வயது 22) ஆகிய இரண்டு பேரும்
மேற்கண்ட நிதி நிறுவனத்திற்கு வந்தனர், பின்னர் நகை அடமானம் வைக்க வேண்டும் என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இரண்டு வளையல்களை அவர்கள் கொடுத்தனர், அது தங்க வளையல் என கருதிய நிதி நிறுவன ஊழியர்கள் அடமானத்துக்கு எடுத்துக் கொண்டு பணம் கொடுத்தனர்.
பின்னர் நகையை உரசி பார்த்தபோது அது கவரிங் நகை என்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து இலால்குடி தச்சங்குறிச்சியை சேர்ந்த அந்த நிதி நிறுவன மேலாளர் சக்திவேல் கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவரிங் நகை அடமான வைத்து பணம் மோசடி செய்த ரெண்டு பேரையும் கைது செய்தனர்.