விராலிமலை மூன்று அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியது
சென்டர் மீடியனை தாண்டி சென்ற அரசு பேருந்து ஒன்று, அதிஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் தப்பினர்.
மதுரையில் இருந்து திருச்சி நோக்கி தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை கன்னியாகுமரியை சேர்ந்த ஜார்ஜ் ஒட்டி வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரி பட்டி பிரிவு அருகே சென்ற இந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்த சென்டர் மீடியனில் ஏறி மறுபுறம் சாலைக்கு சென்றது.
அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி எதிரே சென்ற டி என் எஸ் டி சி பேருந்து ஓட்டுநர் மதுரை சேர்ந்த காமு சாதுர்யமாக பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தி உள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பேருந்து பின்னால் வந்த மற்றொரு அரசு விரைவு பேருந்து பிரேக் அடித்து நின்ற டிஎன்எஸ்டிசி பஸ்ஸின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் பயணிகள் பத்துக்கு மேற்பட்டோருக்கு சிறுசிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.
மூன்று பேருந்துகள் விபத்துகள் விபத்தில் சிக்கிய போதிலும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த விராலிமலை போலீசார் மற்றும் ஹைவே ரோந்து படையினர் உடனடியாக பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினர்.