திருச்சி அரியமங்கலத்தில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை .
திருச்சி திடீர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 74 ) இவரது மனைவி லீலாவதி இவர்களுக்கு மகேந்திரன் சந்துரு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லீலாவதி இறந்துவிட்டார். இதனால் நாகராஜ் சிறிது காலமாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் எலிமருந்ததை தின்று மயங்கி கிடந்தார்.
இதையடுத்து நாகராஜை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.