தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரனின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சமூக ஆர்வலர்கள் அன்னதானம் .
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்
அன்னதானம் வழங்கிய திருச்சிராப்பள்ளி சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள்.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர சேகரன் இல்லத்தில் நிறுவனர் சேகரன் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனை முன்பு திருச்சிராப்பள்ளி சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் புகழ் அஞ்சலி செலுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு மதிய உணவினை தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர சேகரன் தலைமையில், செயலாளர் வழக்கறிஞர் வடிவேல், செய்தி தொடர்பாளர் முகமது சர்புதீன்,சுதாகர், அரசு நாகராஜ், நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் நல சங்க தலைவர் கோவிந்தராஜ், செர்ஸா நுகர்வோர் அமைப்பு தலைவர் தெய்வகுமார், தண்ணீர் அமைப்பு இணைச்செயலாளர் ஆர் கே ராஜா, அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக மாநில அமைப்பாளர் ராஜன்,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்க தலைவர் மோகன்ராம், ஒயிட் ரோஸ் சமூக நல சங்கத் தலைவர் சங்கர், சாலை பாதுகாப்பு நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அய்யாரப்பன், வினை செய் அறக்கட்டளை கார்த்தி, நாட்டுக்கு நல்லது செய்வோம் கணேஷ் சமூக செயற்பாட்டாளர் கோவிந்தசாமி, சீனிவாச பிரசாத், சதீஷ் அம்ரீஷ் உள்ளிட்டோர் வழங்கினர்.