Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்ட விரோதமாக மணல் கடத்திய லாரி பறிமுதல். 2 பேர் மீது வழக்கு பதிவு

0

'- Advertisement -

துறையூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் . 2 பேர் மீது வழக்கு பதிவு

 

Ad banner

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் செங்காச்சி குட்டை பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிம்பர் லாரி ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், எந்தவித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக 3 யூனிட் ஏரி மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிம்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் துறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்ப திவு செய்து, லாரி உரிமையாளரான மணப்பாறை தாலுகா ஆலிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் லாரி டிரைவர் சிவபிரகாசம் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.