திருச்சி தில்லை நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை உடைத்து திருட்டு .
திருச்சி தில்லை நகரில் இன்று அதிகாலையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி தில்லை நகர் 9-வது கிராஸ் பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரில் பிரபல ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பேக்கரி கடை அமைந்துள்ளது.
இதன் மேலாளராக பிரேமா இருந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.
இன்று மீண்டும் காலை 8 மணிக்கு கடையை திறக்க வந்த போது கடையின் சட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ. 43 ஆயிரம் பணத்தை காணவில்லை.
கொள்ளையர்கள் கடையின் பூட்டை ஆக்சா பிளேடு வைத்து அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் சாரநாத் தில்லை நகர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம்
வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.