திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா. தலைவர் ராஜன் பிரேம் குமார் தலைமையில் நடைபெற்றது
திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சந்தன மஹாலில் தலைவர் ராஜன் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் டி. கணேசன் வரவேற்று பேசினார். பொருளாளர் அன்சார் முஹம்மது, விக்னேஷ் ரவி முத்துராஜா, ஆர். சேகர்,செல்லதுரை, வினோத்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். ஒருங்கிணைப் பாளர் கே.பி.செந்தில் குமார் தீர்மானத்தை வசித்தார்.
விழாவில் தமிழ்நாடு கழிவு காகித வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளரும் அகில இந்திய கழிவு காகித வியாபாரிகள் சங்க தென் மண்டல செயலாளருமான பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். அமைப்பு செயலாளர் கோவில் பிச்சை நன்றி கூறினார்.
விழாவில் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் விக்னேஷ் ரவி முத்துராஜா, செல்லதுரை, ஆர்.சேகர், வினோத் குமார், எஸ்.ராஜன் பிரேம் குமார், லட்சுமி நாராயணன், எம்.கே. ரவிச்சந்திரன், விஸ்வநாதன், அந்தோணி காமராஜ், செல்வின் ஜான்சன்,சந்தோஷ் ராஜ், ஜெபதாஸ் , சாமிநாதன், அண்ணாதுரை, ஜெயபாலன், அபுல்ஹாசன், நாகமங்கலம் கண்ணன், பொறுப்பாளர்கள் எம் கணேசன், ஆர் செல்வராஜ் , சி. செல்வகணேஷ்,ஏ. என். மலைச்சாமி, பார்த்திபன், பெ. காந்தி ,மாடசாமி, திருத்துவராஜ், அனைத்து வியாபாரிகள் மளிகை சக்கரை வெல்லம் முன்னேற்ற சங்கம் பாலசுப்பிர மணியன்,
தமிழ்நாடு மருத்துவர் நல சங்க வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநகராட்சி எல்லைக்குள் நடைபெறும் வாரச்சந்தை வியாபாரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
திருச்சியில் 3 கோட்டத்தில் இருப்பது போல் ஸ்ரீரங்கம் கோட்டத்திலும் மாநகராட்சியால் நவீன முறையிலான தண்ணீர், மின்சாரம் வசதியுடன் கூடிய இறைச்சி, மீன் கடைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மாநகராட்சியில் புதியதாக கொண்டு வரப்பட்ட டிரேடு லைசென்ஸ் வரி வணிகர்களை பாதிக்கின்ற அதிக அளவு வரிவிதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
காந்தி மார்க்கெட்டில் புதிய கட்டிடத்தில் மீன் மார்க்கெட் உடனடியாக செயல்பட அனுமதி வழங்க வேண்டும். பழைய கடை உரிமையாளருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் .
மாநகராட்சியில் வணிகர்களுக்கான புதிய வரிவிதிப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரியை உயர்த்தும்போது வணிக சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் உணவு பொருட்கள் சம்மந்தமாக எந்த “பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், எந்த பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்பதனைப் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவுப் பொருட்களை ஆய்வு செய்து அதில் ஏதாவது குறைகள் இருந்தால் வணிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். வணிகர்கள் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.