திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 75 ம் ஆண்டு வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 75-ம் ஆண்டு வைகாசி திருவிழா, 33 ஆம் ஆண்டு பூச்செரிதல் விழா பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், மயில் காவடி எடுத்தனர்.

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் 75-ம் ஆண்டு வைகாசி திருவிழா, 33 ஆம் ஆண்டு பூச்செரிதல் விழா நடைபெற்று வருகிறது.19-ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கோரை யாற்றிலிருந்து அம்மனுக்கு பூ கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் வாணவேடிக்கையுடன் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. தினசரி மாலை மண்டகப்படி அபிஷேகம் நடைபெற்றது. இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. 24-ந்தேதி மாலை குத்துவிளக்கு பூஜையும், 26-ந் தேதி கோரையாற்றில் இருந்து கரகம் பாலித்தல், நையாண்டி மேளம், வாணவேடிக்கை, சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் கோவில் வந்தடைந்தது. 27-ந் தேதி நேற்று காலை பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடத்தை எடுத்து வந்தனர். பக்தர்கள் திருவிழாவை யொட்டி முடி எடுத்தல், அழகு குத்துதல் நிகழ்ச்சியும், பூ மிதித்தல், மயில் காவடி நிகழ்ச்சியிலும் பயபக்தியுடன் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், தொடர்ந்து ஒண்டி கருப்புசாமிக்கு காவு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு அம்மன் வீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி விழா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்று கஞ்சி காய்ச்சி ஊற்றப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை இளங்காட்டு மாரியம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.