திருச்சியில் மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” என்ற தலைப்பிலான பிரம்மாண்ட கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, 6000 பேர் பங்கேற்பு
விவசாயிகளின் வருமானமும் மக்களின் ஆரோக்கியமும் மேம்பட உணவுக்காடு வளர்ப்பும் மரம் சார்ந்த விவசாயமுமே நிலையானத் தீர்வு’ என சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்க கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற இம்மாபெரும் நிகழ்வில் 6,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” என்ற தலைப்பிலான பிரம்மாண்ட கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சிறப்புரையாற்றினர்.அப்போது அவர் கூறுகையில் ;-
‘சத்குரு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விழிப்புணர்வு பேரணிக்குப் பின், விவசாயிகளிடம் ‘மரம் சார்ந்த விவசாயம்’ குறித்த ஆர்வம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் எங்களது நர்சரிகளில் மரக்கன்றுகளுக்கான தேவை உயர்ந்து, உற்பத்தியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்முறை மூலம் மண் வளம், மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன், நதிநீர் வளம் ஆகியவை மேம்படுவதுடன், விவசாயிகளின் வருமானமும் கணிசமாக உயர்கிறது.
சமீபத்தில் ஓசூரில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களிடம், ‘வேளாண் காடுகள்’ என்ற பெயரை ‘மரம் சார்ந்த விவசாயம்’ என மாற்றக் கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று, பெயர் மாற்றம் செய்யப்படும் என அவரும் அறிவித்துள்ளார். இது இந்த முறைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்’ என பேசினார்.

