திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பீடியை அணைக்காமல் தூங்கியதால் குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பரிதாப பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பீடியை அணைக்காமல் தூங்கியதால் குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பரிதாப பலி.
திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி (வயது 75). இவர் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அருகாமையில் வசிக்கும் அவரது மகன் ராஜு தந்தையை கவனித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு மகனின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு குடிசை வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர் பீடி பற்ற வைத்து புகை பிடித்துக் கொண்டு அசதியில் தூங்கி விட்டதாக தெரிகிறது. இந்த தீப்பொறி காற்றில் பறந்து குடிசை வீட்டில் தீ பற்றியது. பின்னர் அந்த தீ வேகமாக அவரது படுக்கையிலும் பரவியது இதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த செங்காளி பலத்த தீக்காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கே டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் செங்காளி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கேகே நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

