திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கண்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கண்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சியில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் ஈடுபட உள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்,இன்று 15.06.2026 தொடங்கிவைத்தர்
வருகிறு ஆகஸ்ட் 1 முதல் 30 ந் தேதி வரை திருச்சி மாநகராட்சி பகுதியில் கணக்கெடுப்பாளர்கள், ஒவ்வொரு வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 30 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த 30 பொறுப்பு அலுவலர்களுக்கும் சுமார் 1850 கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், இன்று முதல் 17ந்தேதி வரை களப்பணியாளர்களக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், தொடங்கி வைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும், வழிமுறைகளையும் களப்பயிற்சியாளர்களுக்கு தெரிவித்தார். இப்பயிற்சி வகுப்பில் துணை ஆணையர் சுல்தானா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

