Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு ( எஸ் ஆர் எம் யூ வீரசேகரனின் சகோதரி ) அமைச்சர் சால்வை அறிவித்து பாராட்டு.

0

 

சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து பாராட்டு.

திருமங்கலக்கோட்டை மேல காலனியில் ஸ்டாலின் தெருவில் வசித்து வரும் சோமு தேவர் – செல்லம்மாள் ஆகியோரது புதல்வியும், எஸ் ஆர் எம் யூ திருச்சி கோட்டச் செயலாளர், துணை பொது செயலாளரும், திருச்சி பொன்மலை பகுதி பொறுப்பாளரும், அகில இந்திய ரயில்வே தொழிலாளர்
சம்மேளனத்தின் மத்திய செயற்குழு உறுப்பினருமான எஸ். வீரசேகரன் அவர்களின் சகோதரிமான அஞ்சுகம்
இன்று பணி ஓய்வு பெறுகிறார்.

அவருடைய சாதனைகள் பின்வருமாறு:

திருமங்கலக்கோட்டை மேல காலணியில் வசித்து வருகின்ற மேற்கண்ட Ms அஞ்சும் அவர்கள், முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுடைய தாயார் மறைந்த தினத்தன்று பிறந்தவர். அதனால் அவருடைய நினைவாக, அஞ்சுகம் என்று பெயரிடப்பட்டார். இந்தப் பெயரினால் அவர் திமுக காரர் என்று முத்திரை குத்தப்பட்டு, அவருடைய பள்ளிப்பருவத்திலேயே பல பிரச்சனைகள் ஏற்பட்டு அதனால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டார். இருந்தும் விடாமுயற்சியோடு, இரண்டு வருடம் பள்ளிப்படிப்பை கைவிட்டாலும், அவருடைய குடும்பத்தாரும் பெண்கள் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினாலும், ஆர்வத்தோடு நான் படித்தே தீருவேன் என்று அதே பள்ளியில் பிரைவேட்டாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி, அதிலே ஒரத்தநாடு கல்வி மாவட்டத்திலேயே முதன்மையாக தேர்ச்சி பெற்று, அதன் பின்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலே, மேல்நிலைப்பள்ளி தேர்வில் பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களும் பெற்றார். கல்லூரி படிப்பை தொடர வேண்டாம் என்று அவருடைய குடும்பத்தார் முடிவெடுத்து அப்போது டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி இருந்ததால் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு நல்ல மதிப்பு இருந்த்தால், அவரை தஞ்சாவூரில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்கள். அதிலும் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றார். அதன் பின்பு எந்த பள்ளியில் பிரைவேட்டாக தேர்வு எழுதினாரோ அதே பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். அங்கிருந்தபடியே பி.எஸ். சி, பி.எட், எம்.எஸ்.சி. எம்.எட் என்று தொடர்ச்சியாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, தனது தனித்திறமையால் உயர்ந்தார். அந்தப் பள்ளியிலும் அந்த பகுதியில் உள்ள மற்ற பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர் கணித ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியை தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார். அவர் எந்தப் பள்ளியில் பணிபுரிந்தாலும் அந்த பள்ளியில் அனைவருமே 100% தேர்ச்சி அடையும் படியும், அவர் எடுக்கின்ற கணித பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று 100% தேர்ச்சி பெறவும் அவருடைய தனித்திறமையும் பாடம் எடுக்கும் முறையும் காரணமாக இருந்தது.
தன்னுடைய மாத வருமானத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க, அவர்களது பள்ளி கட்டணத்தை தானே கட்டி, அத்தோடு தனது வீட்டின் மாடியிலேயே ஒரு பள்ளி போல் அவர்களை வரவழைத்து தினசரி வரவழைத்து பயிற்சிகள் பாடங்கள் நடத்தினார். தன்னுடைய மாத ஊதியத்தில் தான் புரியும் பள்ளிக்கு தேவையான பொருட்களை எந்த விளம்பரம் எந்த விளம்பரமும் இன்றி வாங்கி கொடுத்தார் அரசு பள்ளியே வேண்டாம் என்று பெற்றோர்களும் மாணவர்களும் ஒதுக்கிய நிலைமை மாறி அரசு பள்ளி தான் வேண்டும் என்று அவர்கள் விரும்பும்படியாக அவர் பணியாற்றினார்.
இதனை அறிந்த தமிழக முதல்வர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடம் பரிந்துரை செய்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் நேரடியாக சென்று அந்த தலைமை ஆசிரியை அவர்களுக்கு சால்வை இணைத்து பாராட்டு தெரிவித்தார்.

இதனை அறிந்து மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் வெகுவாக பாராட்டினார்கள். அவருடைய பணியை நாமும் பாராட்டுவோமாக

Leave A Reply

Your email address will not be published.