அரியமங்கலத்தில் பட்டப் பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாத 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி உத்தரவு .
திருச்சி அரியமங்கலம்: தங்கள் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அரியமங்கலத்தில் ஏப்ரல் 30ம் தேதி அன்று முன்னாள் அதிமுக பொன்மலை பகுதி செயலாளர் கேபிள் சேகரின் மகனும் பிரபல ரவுடியுமான முத்துக்குமார் என்பவரை பட்டப் பகலில் நடு ரோட்டில் ஒரு கும்பல் அருவாளால் வெட்டி சாய்த்தது . அடுத்த நாள் அந்த கும்பல் போலீசில் சரன் அடைந்தது.
இந்நிலையில் கொலை நடந்த சம்பவ இடத்தில்
ரவுடி கொலை செய்யப்பட்ட போது கொலையாளிகளை நேரில் பார்த்தும் அவர்களை விரட்டிப் பிடிக்கவில்லை என்ற புகாரில் ரோந்து காவலர்கள் மணிகண்டன், விஜயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருச்சி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.