Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

0

 

திருச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக நேற்று வழங்கப்பட்டது.

திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

பஞ்சப்பூா் பகுதியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க சகால மரியநாதனின் உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அவரின் கல்லீரல் திருச்சி தனியாா் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒரு நோயளிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை தனியாா் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும், இரு கண்கள் திருச்சியில் கண் பாா்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும், உடலின் தோல், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும் தானமாக பெறப்பட்டன.

இத் தகவலை திருச்சி அரசு மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சகாய மரிய நாதனின் குடும்பத்தினருக்கு தானம் பெற்ற நோயாளிகள் தரப்பில் நன்றியும், மருத்துவமனை சாா்பில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.