Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டூ சென்னை ரூ.2.500. ஆம்னி பஸ் உரிமையாளர்களின் அட்டகாசம் தொடருகிறது.

0

 

தொடர் விடுமுறை காரணமாக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகிவரும் நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது மீண்டும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

விடுமுறை அறிவிப்புகள் வெளியானதும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு குதூகலமாகி உடனடியாக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர்.

தேர்தலின்போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்… அதேபோல, வாக்களிப்பதற்கு வசதியாக, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவேதான், தேர்தலின்போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

நாளை வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்கள் என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகின்றது.

இதைத்தவிர பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதிகப்படியான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

எனவே, பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.. இதைத்தவிர ரயில்களும் இயக்கப்படுகின்றன..

ஆனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரிசர்வேஷன் முடிந்தநிலையில், சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது..

இதை சாக்காக வைத்தே, தமிழகத்தில் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு எகிறிவிட்டது.. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூபாய் 3000 வரையிலும், கோவை மற்றும் மதுரைக்கு ரூபாய் 2000 வரையிலும், திருச்சிக்கு ரூபாய் 1500 முதல் 2000 ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்..

இதெல்லாம் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகம் என்கிறார்கள் பொதுமக்கள்.

சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வாங்குகிறார்களாம்.. திருநெல்வேலிக்கு AC பஸ்களில் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. கோவை, மதுரைக்கு ரூ. 2 ஆயிரம், திருச்சிக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஒருசிலர், கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்தனர் என்றாலும், சாதாரண மக்கள் ஆம்னியில் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொருமுறை தொடர் விடுமுறைகளின்போதும், கட்டணத்தை அதிகப்படுத்திவிடுவதே ஆம்னி பஸ் உரிமையாளர்களின் வழக்கமாகிவிடுவதால் அறிவித்துள்ளார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களது அட்டகாசத்தை தொடங்கிவிட்டனர்  என பொதுமக்கள் நொந்து கொள்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.