காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 41). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு அரிசி கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார் .பின்னர் வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக திருச்சி மாவட்டம் முசிறி கீழச்சந்தைபாளையத்தை சேர்ந்த மகாமுனி (வயது 36 )என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.