Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குடி பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில்
மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை.

TVK ad

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சையது முஸ்தபா . இவரது மகன் ஷேக் பார்த்தி (வயது 35). குடிப்பழக்கத்தால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த ஷேக்பார்த்தி வீட்டில் யாரும் இல்லாத போது நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் நாகூர் கனி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடனே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.