Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துர்நாற்றத்துடன் நோய் பரப்பும் செல்லம்மாள் ஆண்கள் மெட்ரிக் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன போராட்டம் . திருவெறும்பூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் எஸ்.கே.டி. கார்த்திக் அறிக்கை

0

'- Advertisement -

திருவெறும்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Ad banner

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேங்கூர் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் (செல்லம்மாள் ஆண்கள் மற்றும் பெண்கள் மெட்ரிக் பள்ளி) பயிலும் சுமார் 7000 மாணவர்கள் பயன் படுத்தும் கழிவுநீர் கழிவுகள் எந்த வித வடிகால் வசதி இல்லாமல் பள்ளியிலிருந்து அருகிலுள்ள விவசாயம் பாசன வாய்க்காலில் வடிய விட்டு பள்ளி முன்புறம் உள்ள வயல் வெளிகளில் சாக்கடை கழிவுகள் கடந்த ஒரு வருடமாக தேங்கி நின்று பன்றிகள் அதில் சுற்றி திரிந்து வருகின்றது . ஆடு மாடுகள் அந்த கழிவு நீரை குடிக்கின்றன. அதன் அருகில் வசிக்கும் காமராஜர் காலனி பெரியார் காலனி மற்றும் வி. எஸ். நகர் பகுதி மக்களுக்க தொற்று நோய்கள் ஏற்பட்டு மற்றும் அதிக துர்நாற்றம் வீசி வருகின்றது‌‌.. இதனை கடந்த ஆகஸ்ட் 15 ல் நடைபெற்ற கிராம் சபை கூட்டத்தில் பொது மக்கள் உடன் அதிகாரிகளிடம் முற்றுகையிட்டோம்.ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அரசு தரப்பிலும் மற்றும் பள்ளி நிர்வாகத்திலும் இருந்து..இது மேலும் தொடரும் பட்சத்தில் போராடித்தான் தீர்வு காண வேண்டும் என்றால் போராடத் தயார் ….. பொது மக்களுடன் நானும் இணைந்து போராட தயாராக உள்ளேன் என்பதை எச்சரிக்கை உடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. எங்களுக்கு பள்ளி இருப்பது பெருமைதான் அதற்காக தீங்கு விளைவிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது அதற்கு யாரும் துணை போகக் கூடாது…

உயர்திரு திருவெறும்பூர் வட்டாச்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எங்களது மக்களை சாக்கடை கழிவு நீரின் மூலம் பரவும் தொற்று நோயிலிருந்து விடுதலைப் பெற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அதிமுக திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்கேடி கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.