திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசனுக்கு மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெ. சீனிவாசன் நியமனம் .
ஆர். மனோகரன், சி. கார்த்திகேயனுக்கு புதிய பொறுப்பு.
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி காலியாக இருந்த மாவட்ட செயலாளர் பதவியிடங்கள் மற்றும் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.
அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெ.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த அவருக்கு தற்போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முன்னாள் அரசு கொறடா ஆர். மனோகரனுக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருந்த ஆவின் சி.கார்த்திகேயன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு திருச்சி மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்,
தொழிலதிபர் இன்ஜினியர் இப்ராம்ஷா,
தொழில் அதிபர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பல தொண்டர்களும், நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.