Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .

0

'- Advertisement -

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்:

Ad banner

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று 21.05.26 (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல் லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தரராஜ் நகர், ஜே.கே. நகர், செம்பட்டு, காஜாமலை பழை யது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர் புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர், கவிபாரதிநகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்புநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல்நகர்

 

இ.பி.காலணி, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகர், ரெயில்நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை செக்ஸன் ஆபீஸ், நாகம்மைவீதி, மேல கல்கண்டார் கோட்டை நூலகம், பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்தர் நகர், எல்.ஐ.சி. காலனி, விஸ்வநாதபுரம் கே.சாத்த னூர், ஆனந்த்நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே.கே.நகர், அம்மா மண்டபம், ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவதானம், விறகுப் பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 22.05.26 (வெள்ளிக் கிழமை) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது ,எனவே பொதுமக்கள் குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.