Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அறங்காவலர் விஜயகுமார்.

0

'- Advertisement -

காணாமல் போகும் உறவுகள்.

Ad banner

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.

காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு வீடற்று யாசகம் கேட்டு உண்டு உறங்கி வருபவர்கள் பொது இடத்தில் இறந்து விட்டால்,

அவர் இறந்து விட்டார் என சொல்லிக் கொண்டே பலர் செல்கிறார்கள். அச்சூழலில் உற்றார், உறவினர், சுற்றத்தார் யாருமின்றி உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்து வருகிறார் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்.

காணாமல் போகும் உறவுகள் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,

 

ஆதரவற்று இறப்பவர்களுக்கு உற்றார், உறவினர், சுற்றத்தார் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை.

காக்க படவேண்டியவர்களால் கைவிடப்பட்டவர்கள் அடையும் துயரம் பல.

பலமுறை பார்த்திருக்கின்றேன்.

யாசகர்களை பார்த்து

காசு மரத்திலேயா காய்க்குது என்ற அமிலவார்த்தையை வீசி செல்வோர் பலரை. அவரை கவனிக்க ஆளில்லை. பல வருடங்களாக ஆதரவற்றவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும்

வழங்கி வருகிறேன்.

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.

இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து அறிவியல் வளர்ச்சியாலும் தொழில்நுட்ப புரட்சியாலும் விஞ்ஞானத்தோடு உறவு வளர்த்து வருகின்றனர்.

மனித உறவுகள் இன்று உதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன.

 

பெற்றோரிடமும், பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய்,இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து வாழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது.

இனி வரும் காலங்களில் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன் இது போன்ற உறவுகள் எல்லாம்

தொலைந்து போய்விடும் போல் உள்ளது. ஏனென்றால் இவ்வாறு உறவுகள் இருந்தால் யாரேனும் ஒருவர் ஆதரவு கொடுத்து குடும்ப உறவுகளை பாதுகாத்து இருப்பார்கள். ஆதரவற்று யாரும் இருக்க மாட்டார்கள்.

நகர்ப்புறங்களில்

சொந்த பந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி உறவுகளைத் தொலைத்து உணவிற்காக யாசகர்களாக கையேந்தி நிர்கதியாய் உள்ளார்கள்.

தன் துன்பங்களில் பங்கேற்க யாருமின்றி அவதிப் படுகிறார்கள்.

வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க ஆளில்லா அவலத்தில் உள்ளார்கள். உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆதரவற்றவர்கள்

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க யாரும் இல்லை. இறந்தாலும் உரிமைக் கோர உறவுகள் யாரும் இல்லை. பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை.

ஆனால் உறவுகள் இல்லாதவர்களை சமூகம் அனாதை என்பது வருத்தமளிக்கிறது.

காணாமல் போகும் உறவுகள் கலாச்சாரம் மாற வேண்டும் என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.