Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : அதிமுகவில் இருந்து இணைந்து வருபவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர்கள், மண்டல் தலைவர்கள்,கூட்டுறவு தலைவர்கள் பதவிகளை பெறலாம் என்ற எண்ணத்தில் தவெகவில் இணைகிறார்கள்

0

'- Advertisement -

விரைவில் முதலமைச்சர் விஜய் திருச்சி வந்து மக்களை சந்திப்பார்.

Ad banner

எம்ஜிஆர் உருவாக்கிய  அதிமுகவை எடப்பாடி சிதைத்து விட்டார் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி .

முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சிக்கு வந்து மக்களை சந்திப்பார். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிதைத்து விட்டார் என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் கிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-

தமிழக வெற்றி கழகத்தில் இன்றைக்கு பல்வேறு இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர் எனது தலைமையிலும் பலரும் இணைந்துள்ளனர் புதிதாக இணைபவர்களிடம் நான் எந்த பதவியும் வாங்கி தருவேன் என உத்தரவாதம் அளிக்கவில்லை அவர்களும் அதை விரும்பவில்லை தொடர்ச்சியாக இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்று தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்ற வந்திருக்கிறார்கள் அவர்களை நான் வரவேற்கின்றேன்.

எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த அண்ணா திமுக வின் வளர்ச்சிக்கும் நாங்கள் பாடுபட்டுள்ளோம்.

இப்போது அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிதைத்து விட்டார்.

விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.

அந்த வகையில் திருச்சிக்கும் அவர் விரைவில் வருகை தர உள்ளார் திருச்சிக்கு வரும்போது மக்களை நிச்சயம் சந்திப்பார்

 

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர்

முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் மற்றும்

நிர்வாகிகள் கருமண்டபம் பத்மநாதன், என்.எஸ். பூபதி, உஸ்மான் பாபு ஆகியோர் முன்னிலையில்.

அதிமுக மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முல்லை சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள்  பா.நிரஞ்சன், பொன் சிவ சூர்யா ,தி. அருண்குமார், அ. அப்சர் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அருள்ஜோதி, ஏர்போர்ட் விஜி, உய்யக்கொண்டான் திருமலை பால்ராஜ்,வரகனேரி அரசு,  எட்டரை வீரையன், தென்னூர் ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கு. ப. கிருஷ்ணன் எந்த பதவியும் எதிர்பார்த்து யாரும் வரவில்லை என்று கூறினாலும் தற்போது திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவில் இருந்து இணைந்து வருபவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர்கள், மண்டல் தலைவர்கள்,கூட்டுறவு தலைவர்கள் பதவிகளை பெறலாம் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.