திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை
குழந்தைகளுக்கான புதிய பிரிவை தொடங்கியது.
திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டி. செந்தில்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
எலக்ட்ரோ பிசியாலஜி தளத்தில் முன்னோடி மருத்துவ அமைப்பாக திகழும் திருச்சி காவேரி ஹார்ட் ரிதம் சர்வீசஸ் குழந்தைகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி (மின் உடலியங்கியல்)
என்ற புதிய துணை பிரிவு தொடங்கப்படுவதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.
குழந்தைகளிடம் காணப்படும் இதய பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்டா பிராந்தியத்தில் ஒரு பிரத்யேக பிரிவை நிறுவியிருக்கும் முதல் கார்ப்பரேட் மருத்துவமனை என்ற பெருமையை திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி பெற்றுள்ளது.
இதில் இதய பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு உறுப்பு நீக்கங்கள், பேஸ்மேக்கர்கள், மரபியல் ரீதியாக குழந்தைகளுக்கு வரும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு சிகிச்சை, வளரும் கருவில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இருப்பதை அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது .
இந்த எலக்ட்ரோ பிசியாலஜி பிரிவு ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறப்பு வெளி நோயாளி சேவைகளை வழங்கும்.
இதன் மூலம் இளவயது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இதய ரிதம் பிரச்சனைகளுக்கு உயர்தர சிகிச்சை பராமரிப்பை அணுகி பெறக்கூடியதாக பிரத்யேக பணியை இந்த பிரிவு மேற்கொள்ளும்.
இந்த உலக இதய தினத்தன்று குழந்தைகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி பிரிவு தொடங்கப்பட்டது இளைய நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதயவியல் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜி சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோசப் கூறும் போது,
இந்த மருத்துவமனையில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹார்ட் ரிதம் சர்வீஸ் தொடங்கப்பட்ட
திலிருந்து 400 க்கும் அதிகமான எலெக்ட்ரோபிசியாலஜி மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இருக்கிறோம்.
ஏற்கனவே வயதில் மூத்த பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது குழந்தைகளுக்கான எலக்ட்ரோ பிசியாலஜி என்ற துணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
பேட்டியின் போது குழந்தை இருதய நோய் நிபுணர் டாக்டர் மணி ராம்கிருஷ்ணா மற்றும் பலர் உடன் இருந்தனர்.