Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு A++ அந்தஸ்து வழங்கியது.

0

 

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டு புதிய அந்தஸ்து.


திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜ்முதீன், பொருளாளர் எம். ஜே. ஜமால் முகமது ஆகியோர் இன்று கல்லூரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது;-

தன்னாட்சி அந்தஸ்துடன் விளங்கும் ஜமால் முகமது கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு அமைப்பால் 4-வது சுழற்சியின் போது மொத்த மதிப்பு 4.0 க்கு 3.69 உயர்தரத்துடன் கூடிய A++ மதிப்பெண் பெற்றுள்ளது.
இந்த மதிப்பீடு கல்லூரியின் பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல் ,ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், விரிவாக்கம், உள் கட்டமைப்பு,கற்றல், வளங்கள், மாணவர்கள் ஆதரவு மற்றும் முன்னேற்றம், நிர்வாகம், தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் நிறுவன மதிப்புகள் முதலிய அம்சங்களின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிக்கான ஆய்வு தேசிய தர மதிப்பீடு அமைப்பால் உருவாக்கப்பட்ட குழுவின் மூலம் செப்.20.21தேதிகளில் நடைபெற்றது. இந்த குழுவானது கல்லூரியில் உள்ள அனைத்து துறை மற்றும் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு துறைகளின் சிறப்பு அம்சங்களை அறிந்து கொண்டனர்.
மேலும் மாணவ மாணவிகளோடும், பெற்றோர்களோடும், முன்னாள் மாணவர்களோடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களோடும் கலந்துரையாடி கல்லூரியின் பன்முகத்தன்மையை பற்றி தெரிந்து கொண்டனர்.

இந்த குழு ஆய்வின்போது கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளித்தனர். முன்னாள் மாணவர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியதாக அமைந்திருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது கல்லூரியின் கௌரவ இயக்குனர் கே.என். அப்துல் காதர் நிகால்,கல்லூரி முதல்வர் எஸ். இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.