திருச்சியில் எலெக்ட்ரிசியன் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தை சேர்ந்தவர் அடைக்கல மேரி ஆனந்தி.இவரது கணவர் விக்டர் அசோக்குமார் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.
இந்த நிலையில் இவர் இளைய மகன் மரிய ஆண்டனிராஜ் (வயது 25) என்பருடன் அடைக்கல மேரி ஆனந்தி வசித்து வந்தார்.மரிய ஆண்டனி ராஜ் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த மரிய ஆண்டனி ராஜ் தனது தாய் அடைக்கல மேரி ஆனந்தியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அடைக்கல மேரி உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று தாய்,மகன் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு சென்றனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மரிய அந்தோணி ராஜ் தூங்குவதாக கூறி அறைக்கு சென்றார்.பிறகு மீண்டும் மகன் தன்னிடம் வந்து தகராறில் ஈடுபடுவாரோ என்று பயந்து தாய் அடைக்கல மேரிபிறகு நீண்ட நேரம் ஆகியும் தாய் அடைக்கலமேரி ஆனந்தி மகன் மரியா அந்தோணி ராஜ் தூங்கிவிட்டாரா? என்று பார்க்க சென்றார். அப்பொழுது அறையின் அருகே உள்ள ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அறைக்குள் மின்விசிறியில் நைலான் கயிறால் மரிய அந்தோணி ராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரிய அந்தோணி ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.