7 வயது சிறுமிக்கு இதயத்தில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை சாதனை.
திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் 7 வயது சிறுமிக்கு இதயத்தில் நவீன முறை சிகிச்சை.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு இதயத்தில் பெரிய ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதை சரி செய்வதற்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை வழக்கமான செயல்பாடாக இருந்தது. எனினும் திருச்சி காவேரி மருதுமனையில் அந்த சிறுமிக்கு புதுமையான செராபிளக்ஸ் செப்டல் அக்லூடர் என்ற நவீன சிகிச்சை முறை தேர்வு செய்யப்பட்டது.
குழந்தையின் இதயத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டை மூடுவதற்கு ஒரு புதுமையான செராபிளக்ஸ் இடைச்சுவர்
பல் பொருத்தி என்பதனைப் பயன்படுத்தி காவேரி ஹார்ட் சிட்டியின் குழந்தைகளுக்கான இதய இடையீட்டு சிகிச்சை குழுவினர் வெற்றி கரமாக அந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். வர்த்தக ரீதியாக இந்த சாதனம் கிடைக்கப் பெற்றதற்குப் பிறகு தெற்கா சியாவில் முதன்முறையாக திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு இருபதாக இதயவியல் டாக்டர் மணிராம் கிருஷ்ணா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறினார்:.
இந்த சிறுமிக்கு இதய குறைபாடு ஓட்டை சரியாக மூடப்படுவதற்கு செராபிளக்ஸ் சாதனம் பயன்படுத்தப்பட்டது. எந்தச் சிக்கலும் இல்லாமல் அந்த சிறுமி அடுத்த நாளே மருதுமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்த 3 நாட்களில் பள்ளிக்கு செல்லவும் முடிந்தது. பிறவி இதய குறைபாடுகள். நோய்கள் ஏறக்குறைய 100 குழந்தைகளில் ஒருவரை பாதிக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 350-க்கும் அதிகமான இதய இடையீட்டு சிகிச்சை செயல்முறைகளை திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.
இந்த செராபிளக்ஸ் சாதனை வெற்றிகரமான குழந்தைகளுக்கான இதயவியல் சிகிச்சையில் சிறப்பான சாதனையை நிகழ்த்தி இருப்பதில் நாங்கள் பெருமையும், உற்சாகமும் கொள்கிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை செயல் இயக்குனர், டாக்டர் செந்தில்குமார், டாக்டர்கள் அரவிந்த் குமார், பிரவீன் குமார், சாந்தி, பொது மேலாளர் மாதவன், ஆண்ட்ரூஸ் நித்தியதாஸ் மெடிக்கல் இயக்குனர் சுரேஷ் வெங்கிட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.