Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் அடுத்ததின் முலம் மீண்டும் டாப் 10-ல் இடம் பிடித்தார் விராட் கோலி.

0

'- Advertisement -

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ad banner

இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி டாப்-10க்குள் மீண்டும் நுழைந்து உச்சம் கண்டுள்ளார்.

அதன்படி ஐசிசி இன்று வெளியிட்டுள்ள புதிய டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15வது இடத்தில் இருந்த விராட் கோலி 6 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு (635 ரேட்டிங் புள்ளி) முன்னேறியுள்ளார்.

இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 849 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 92 ரன்கள் எடுத்ததன் முலம் இந்த பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அதே போல் 2-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சூர்யகுமார், கோலியை தவிர இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 16-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.