Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.

0

'- Advertisement -


Ad banner

ஐ.பி.எல். தொடர் முடிந்த பின் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது.

ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை போட்டிகள் நடக்கிறது.

TVK ad

ஜூன் 9 அன்று டெல்லியில் முதல் போட்டி நடைபெறும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா , விராட் கோலி , கே.எல்.ராகுல் , பும்ரா ,ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.

இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் விபரம் வருமாறு:-
குயிண்டன் டி காக்,டெம்பா பவுமா, ரீஸா ஹெண்ட்ரிஸ், கிளாசென், கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, பர்னெல்,நோர்ஜே , டுவைன் பிரிட்டோரியஸ் , ரபாடா, ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வாண் டர் டுசென், மார்கோ ஜான்சன் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.