திருச்சி உறையூரில் இலவச மருத்துவ முகாமை அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. மகளிர் அணி செயலாளர் வனிதா ஏற்பாட்டில் திருச்சி உறையூரில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. மகளிர் அணி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான வனிதா மற்றும் பிரண்ட்லைன் ஹாஸ்பிடல் இணைந்து இலவச மருத்துவ முகாமை திருச்சி உறையூர் சோழராஜபுரம் விளையாட்டு திடலில் நடத்தியது. இந்த மருத்துவ முகாமை அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் தலைவருமான கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் எடை மற்றும் பொதுவான உடல் நலக் குறைபாடுகளுக்கான இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டு மருந்து மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைப்படி தேவையான அடிப்படை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர்கள் ஜெ.ஏ. தேவா, கே. ராகினி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த முகாமில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், அவைத் தலைவர் தங்கராஜ்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கல்லுக்குழி சுந்தர், ராஜ்மோகன்,பகுதி செயலாளர்கள் தில்லை முருகன், முத்தையா, வசந்தம் செல்வமணி,
திருநாவுக்கரசு, முத்துக்குமார், வட்டச் செயலாளர்கள் எம். ஜெ. பி. வெஸ்லி, சுப்ரா, சந்திரசேகர், சையது அபுதாகீர் மற்றும் சுதர்சன், ரஜாக், சதீஷ் ககுமார், லோகநாதன், சரவணகுமார், பொன்ராம், இளநீர் குமார், கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

