Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூக பணித்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூக பணித்துறை, துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் EQUITAS TRUST, இணைந்து ORBIT கம்பனி ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் திருச்சி மாருதி மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையில் ORBIT வளாகத்தில் நடைபெற்றது.

TVK ad

இம்மருத்துவ முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை கௌரவ விரிவுரையாளர் கார்த்திகேயன் EQUITAS TRUST CSR மேனேஜர் வெங்கடேஷ், திருச்சி மாருதி மருத்துவமனையின் மருத்துவ குழுவும் கலந்து கொண்டனர்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை EQUITAS TRUST CSR மேனேஜர் வெங்கடேஷ் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணி துறையின் கௌரவ விரிவுரையாளர் கார்த்திகேயன், முதுகலை முதலாம் ஆண்டு மாணவி சௌமியா, துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் பார்த்திபன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் சூரியா, தர்ஷினி, வினோதினி, பாரதி மற்றும் “ORBIT” கம்பனி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.