திருச்சியில் நேற்று நள்ளிரவு பலத்த இடியுடன் தொடர் மழை ஒரே நாளில் 303 மிமீ மழை பதிவு …
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 2 வாரங்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில் கடந்த 1 நான்கு நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது பகலில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மாலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது.மேலும்நள்ளிரவு மழையுடன் பலத்த இடி இடித்தது.இந்த இடி வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்துடன் ஒலித்தால் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிர்ச்சி அடைந்து கண்விழித்து பார்த்து பயந்தனர்.
இந்த தொடர் மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்குதல் சற்று தணிந்து சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 47.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-
லால்குடி 6.4 ,நந்தியாறு அணைக்கட்டு 4.2, புள்ளம்பாடி 20.8, தேவி மங்கலம் 11.8, சமயபுரம் 10.4, சிறுகுடி 24.2,
கல்லக்குடி
10.2,
மணப்பாறை 2, பொன்னணி ஆறுஅணை 1, கோவில்பட்டி 5.1, முசிறி 17, புலி வலம் 16, தாப்பேட்டை 4,
நவலூர் கொட்டப்பட்டு 15, துவாக்குடி 12.1, தென்பர நாடு 20, துறையூர் 22, பொன்மலை 6.8 ,திருச்சி ஏர்போர்ட் 17.3,
திருச்சி ஜங்ஷன் 16.6 திருச்சி டவுன் 13.4 என மொத்தம் 303.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 12.65 ஆகும்.

