Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அஇஅதிமுகவின் 55 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூரில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கிய மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன்

0

'- Advertisement -

அஇஅதிமுகவின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டிபுதூரில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சிக்கொடியேற்றி அன்னதானம் வழங்கினார்

Ad banner

அஇஅதிமுகவின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 62 A வட்டக் கழகம் சார்பில் பகுதி செயலாளர் வசந்தம் டி.எஸ். எம் . செல்வமணி தலைமையில் ராமச்சந்திரா நகர் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மனனுமான கார்த்திகேயன் கலந்து கொண்டு அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் திருவுருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் அதிமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, மகளிர் அணி துணை செயலாளர் தீபா, வட்ட செயலாளர்கள் சார்லஸ், துரைசாமி, சுரேஷ் எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.