Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நோகாமல் சம்பாதிக்கலாம் என திருச்சியில் ரூ. 5 லடசம் ஏமாந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆலோசகர்

0

'- Advertisement -

நோகாமல் சம்பாதிக்கலாம் என திருச்சியில் ரூ. 5 லடசம் ஏமாந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆலோசகர்  ஆன்லைனில்  ரூ 4 லட்சம் 98 ஆயிரம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

Ad banner

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47) இவர் பிஎஸ்சி மற்றும் எம்பிஏ விவசாயம் தொடர்பாக படித்துவிட்டு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி அவருக்கு முகநூலில் வர்த்தகம் தொடர்பான ஒரு குறுஞ்செய்தி வந்தது.அதில்

எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதனை நம்பி ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணத்தை ஆன்லைனில் வெங்கடேசன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு செலுத்தினார். பிறகு அந்த பணத்தை அவரால் மீண்டும் எடுக்க முடியவில்லைமேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை . இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த வெங்கடேசன் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். (இவரைப் போன்று நோகாமல் பணத்தை முதலீடு செய்து 3 மடங்கு 4 மடங்கு சம்பாதிக்கலாம் என ஏமாந்தவர்கள் பற்றி பல செய்திகள் வெளிவந்த போதும் இவ்வாறு படித்தவர்களே ஏமாறுவது எப்படி என தெரியவில்லை)

அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை ஏமாற்றிய மர்ம ஆசாமி யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.