திருச்சி மொராய்ஸ் சிட்டி குறித்து
தகறான தகவல்கள் பரப்பப்படுகிறது
குடியிருப்பு சங்க தலைவர் வருத்தம்.
திருச்சி மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு நலச்சங்க தலைவர் ஜெயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது :
திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்; மொராய்ஸ் சிட்டி அமைந்துள்ளது. இங்கு 454 குடியிருப்புகள் உள்ளன. இதில் பலதரப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அருகில் உள்ள கிராமங்களில் இருந்து டிரைவர்கள், ஹவுஸ் கீப்பிங் பணிக்கு என 300க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்கின்றனர்.
கொரோனா காலங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகள் உள்பட பல சமூகபணிகளையும் குடியிருப்பு நலச்சங்கம் செய்து வருகிறது.
இந்த குடியிருப்பு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைத்துள்ளதால் இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் குடியிருப்பின் முகப்பு பகுதியில் புல்தரையுடன் கூடிய ரவுண்டானா மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த ரவுண்டானா அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அரசால் அகற்றப்பட்டது.
அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இந்த ரவுண்டானா அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலேயே மின் விளக்குகளுடன் ரவுண்டானா அமைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற எங்களுக்கு போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால் அதை நாங்களே அகற்றி இருப்போம்.
மேலும் இதுகுறித்து நீதிமன்ற தடையும் பெற்றுள்ளோம். எனவே குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை தவிர்க்கும் விதமாகவும்
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் இப்பகுதியில் மீண்டும் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கான செலவில் 50 சதவீதத்தை குடியிருப்பு நலச்சங்கம் வழங்க தயாராக உள்ளது.
இதுகுறித்து இத்தொகுதி (கிழக்கு) சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகர மேயரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம் எனக்கூறினார்.
பேட்டியின் போது சேர்மன் பழனிசாமி, மேலாளர் ரமேஷ்,
பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.