திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் மற்றும் அருண் ஓட்டல் எதிரில் உள்ள மைதானத்தில் பனிமலை கொண்டாட்டம் குளுகுளு பொருட்காட்சியை பிளாக் தண்டர் உரிமையாளர் ஜோசப் லூயிஸ் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் மற்றும் அருண் ஓட்டல் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்டின் பனிமலை கொண்டாட்டம் குளுகுளு பொருட்காட்சியை இன்று (திங்கட்கிழமை)மாலை 6 மணி அளவில் பிளாக் தண்டர் உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் திருச்சி ஜோசப் லூயிஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைக்கிறார்.

இந்த பொருட் காட்சியில் மிக பிரமாண்டமாய் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பனிமலை குளுகுளு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் ஜெயின்ட்வீல், கொலம்பஸ், ரோபட்டிக் டாக், 3D ஷோ, பேய் வீடு, வாட்டர் பலூன், படகு சவாரி, பலூன் கேம்ஸ், ஹெலிகாப்டர்,ரோலர் கோஸ்டர்,மினி கார், மினி பைக்,பனி உலகம், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகள் விளையாடி மகிழ ரிமோட் கார் ஹெலிகாப்டர் ஏரோபிளேன் ட்ரோன் மற்றும் எண்ணற்ற விளையாட்டு சாதனங்கள்,
டெல்லி அப்பளம், ரியல் எஸ்டேட், கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு அரங்குகள் மற்றும் பல மெய்சிலிர்க்க வைக்கும் அரங்குகள் நிறைந்துள்ளன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து பொருட்காட்சி நல சங்க தலைவர் அன்வர்ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் சலீம், பெரம்பலூர் நளபாகம் குழுமத் தலைவர் முத்துவீரன், காசி விஸ்வநாதன், ஆசிரியர் பாபு, அய்யர் மாமா,கார்த்தி,முரளி மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை SSS என்டர்டெயின்திறப்பு விழாவுக்கானமெண்ட் உரிமையாளர் சுதாகரன் மற்றும் எஸ் டிவி பாலு செய்து வருகின்றனர்.

