Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பஸ் எங்கே செல்கிறது என கேட்டது குற்றமா ? ஓடும் பஸ்ஸில் முதியவரை அடித்தே கொன்ற கொத்தனார்.

0

'- Advertisement -

சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ad banner

சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து கொன்றுள்ளார்.

பேருந்தின் பெயர் பலகையை பார்க்காமல் முதியவர் ஏறிவிட்டதாகவும் இந்த பஸ் எங்கே செல்கிறது என்றும் இளைஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு தெரியாது எனவும், நடத்துனரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுமாறு கூறிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் கூடுவாஞ்சேரியில் இருந்து வடபழனி செல்வதற்காக 70ஜி என்ற எண் கொண்ட பஸ்சில் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து ஏறியுள்ளார். அப்போது அதே பேருந்தில் தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி செல்வதற்காக பஸ்சில் இளைஞர் அமர்நாத் என்பவர் இருந்தார்.

கொத்தனாராக வேலை பார்த்து வரும் அமர்நாத் அருகில் முதியவர் சந்திரசேகரன் இருந்துள்ளார். அப்போது முதியவருக்கு பஸ் எங்கே செல்கிறது என தெரியவில்லை. பெயர் பலகையை பார்க்காமல் ஏறியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பஸ் எங்கே செல்கிறது என்று இளைஞர் அமர்நாத்திடம் கேட்டுள்ளார். அவர் வடபழனி நோக்கி செல்கிறது என பதில் அளித்துள்ளார். ஆனால் மீண்டும் அவர் அதே கேள்வியை கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எனக்கு தெரியாது என்று சொன்ன அமர்நாத், நடத்துனரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டனர் . ஒரு கட்டத்தில் முதியவரை அமர்நாத் தாக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் முதியவரை முன் இருக்கையில் அமர கூறினர்.

அதன்பேரில் எழுந்த முதியவரை அமர்நாத் கழுத்தை பிடித்து நெரித்து, சரமாரியாக தாக்கி உள்ளார். ஓடும் பேருந்துக்குள் வைத்தே இளைஞர் தாக்கியதில் முதியவர் அப்படியே சரிந்து விழுந்தார். இதனால் பேருந்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் முதியவரை ஆம்புலன்ஸ் மூலமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

மேலும் தப்பி ஓட முயன்ற இளைஞர் அமர்நாத்தை பிடித்து வைத்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து அமர்நாத்தை கைது செய்தனர். ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.