Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பறித்து சென்ற மர்ம நபர்கள்

0

'- Advertisement -

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பறித்த 4 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு.

 

Ad banner

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24 ந் தேதி மாலை பூச்செடிகளை லாரியில் ஏற்றி வந்து திருச்சி மாவட்டம் வடசேரி பகுதியில் உள்ள ஒரு பூச்செடி விற்பனை கடையில் இறக்கி வைத்தார். பின்னர் அப்பகுதியில் மது குடித்து உள்ளார்.

அப்போது அவர் இணைய வழி டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு நபரை அழைத்ததாக தெரிகிறது. அந்தப் நபர் அவர் இருந்த இடத்திற்கு மூன்று மர்ம ஆசாமிகளுடன் காரில் வந்தார். இதைத் தொடர்ந்து சதீஷ் ராஜிடம் இருந்த பத்தாயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை காரில் அழைத்து சென்றனர். பிறகு அவரது ஏடிஎம் கார்டை பறித்து அதில் இருந்து மேலும் 30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு பஞ்சப்பூர் பெட்ரோல் பங்கில் காருக்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு அவரிடம் இருந்த மேலும் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை காரில் அழைத்து வந்து பஞ்சபூர் அருகே இறக்கிவிட்டு சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து எடமலை பட்டிப்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து

ரூபாய் 50 ஆயிரம் பணத்தை திருடி சென்ற நான்கு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.