திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணியை சந்திக்க முடியாமல் தவிப்பு பொதுமக்கள் அவதி ..
மாநகராட்சியின் புதிய ஆணையர் நே.பொன்மணி பொறுப்பேற்றது முதல், வாரத்தின் முதல் பெரும்பாலான நாட்கள் அடுத்தடுத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை அன்று காலை 10:15 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால்,அதிகாரிகள் கூட்டம் முடிந்து இரண்டரை மணியளவில் வெளியே வந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி, காத்திருந்தவர்களை முறையாக அமரவைத்து சந்திக்காமல், நடந்து சென்று கொண்டே மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காகக் கூட்டங்கள் நடத்துவது அவசியம் தான் என்றாலும், பொதுமக்களின் குறைகளைக் கேட்பதற்கு எனத் தினசரி ஒரு குறிப்பிட்ட பார்வையாளர் நேரத்தை (எ.கா: மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை) அல்லது வாரத்தில் குறிப்பிட்ட நாட்களையாவது ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.பல பொதுமக்கள் மற்றும் விஐபிகள் தன்னை சந்திக்க காத்திருப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் கமிஷனர் பொன்மணி என புகார் எழுந்துள்ளது
அப்போதுதான் தூரப் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக் கிடப்பது தவிர்க்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் ..
இனியாவது பொதுமக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பாரா மாநகராட்சி ஆணையர் பொன்மணி

