Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த தவெக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

திருச்சி திருவெறும்பூரில் தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததை கண்டித்து திமுகவினர் காட்டூர் ஆயில் மில்பகுதியில் உள்ள கலைஞர் சிலை முன்பு தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Ad banner

முன்னாள் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் செய்ததாக கூறி தவெக அரசு நேற்று அவரை கைது செய்தது

இதனை கண்டித்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பகுதியில் உள்ள கலைஞரின் திருஉருவ சிலை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் தலைமையில் த வெ க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

பகுதி செயலாளர்கள் நீலமேகம் , கொட்டப்பட்டு தர்மராஜ் சிவகுமார், , ஏ எம் ஜி விஜயகுமார், திருவெறும் பூர் ஒன்றிய செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி, கங்காதரன்,கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு கூத்தைபார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதோடு தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய பகுதி நகர பேரூர் மாவட்ட நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் கண்டன கோஷம் எழுப்பினர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.