திருச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு.
திருச்சி எடத்தெருவில்
அதிமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல்.
வெல்லமண்டி நடராஜன், சீனிவாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி எடத்தெருவில் மாநில இணைச் செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் திறந்துவைத்தார்.
மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
பொதுமக்களுக்கு நீர்மோர் , ஜிகர்தண்டா, இளநீர் ,வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வக்கீல் ராஜ்குமார் , பத்மநாதன், ராஜேந்திரன், கருமண்டபம் நடராஜன்,
ஜோதி வாணன், அன்பழகன், கலைவாணன், சகாபுதீன், நாட்டாமை சண்முகம் ,பாலாஜி, என்ஜீனியர் ரமேஷ், சொக்கலிங்கம், வசந்தம் செல்வமணி, கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, கண்ணன் , தர்மராஜ், தர்கா காஜா,வரகனேரி சரவணன், உடையாம்பட்டி செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.