திருச்சியில் 4 மாதங்களாக காத்திருப்பு பட்டியலில் இருந்தும் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் ஐ.பி.அதிகாரி. உயர் அதிகாரிகள் தொடர்பா?
திருச்சியில் தொடர்ந்து 4 மாதமாக காத்திருப்பு
பட்டியலில் இருந்தாலும் கலக்கும் ஐ.பி அலுவலர்.
காரணம் புரியாமல் விழிக்கும் சக அலுவலர்கள்
திருச்சியில் பணியில் இல்லாவிட்டாலும், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவாறு துறை சார்ந்த விஷயங்களில் கலக்கி வருகிறார் மத்திய உளவுத்துறை அலுவலர் ஒருவர்.
விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு (இமிகிரேஷன்) தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக ஐ.பி எனப்படும் மத்திய உளவுத்துறை போலீஸாரின் கட்டுப்பாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. என்றாலும், உயர் அலுவலர்களாக
ஐ.பி பிரிவினர் பணியாற்றிய நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில், தமிழக காவல்துறையில் கடந்த பல ஆண்டுகளாக குடியேற்றப்பிரிவில் பணியாற்றிய நபர்கள் சிலரைக் கொண்டும் குடியேற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
திருச்சி விமான நிலையத்திலும் இதே நிலைதான் உள்ளது. குடியேற்றப்பிரிவு உயர் அலுவலர் மற்றும் ஐ.பி.பிரிவைச் சேர்ந்தவர்கள் பணியாற்றினாலும், ஏற்கெனவே பணியாற்றிய போலீஸார் மற்றும் பல்வேறு மத்திய காவல்துறை துணைராணுவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் ஓ டி யாக பணியாற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வடமாநிலத்தை (ம.பிரதேசம்) சேர்ந்த கபில் சுக்லா உயரதிகாரியாக பணியாற்றி வந்தார்.
அவர் டிராவெல் ஏஜென்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு, இசிஆர் பாஸ்போர்ட்டில் செல்வோருக்கு உதவுவதாகவும், மேலும் முறைகேடு ஆவணங்களில் செல்வோருக்கும் உதவியதாகவும் புகார் எழுந்தது. அதன்மூலம் முறைகேடாக வருவாய் ஈட்டி, திருச்சி கே கே நகர், சுந்தர் நகப் பகுதிகளில் இடங்கள் வாங்கியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் அவரது நடவடிக்கையால், சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஐ பி யில் பணியாற்றும் உயரதிகாரிகளின் பெயர்களை கூறியும், தமிழகத்தை, திருச்சியைச் சேர்ந்த பணியாளர்களை பணியிட மாற்றம் செய்வதாகவும் கூறி பல நல்ல அலுவலர்கள் குடியேற்றப்பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கும், பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், இசிஆர் வகை பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்திருந்தபோது, குடியேற்றப்பிரிவு அலுவலர் (அவர்) ரூ. 20,000 கொடுத்தால்தான் துபாய் செல்ல முடியும் என கேட்டது தொடர்பாக திருச்சி விமான நிலைய இயக்குநருக்கும் மற்றும் சில ஐபி உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்ததின் பேரில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவரது இடத்திற்கு மற்றொரு அதிகாரி உடனடியாக நியமிக்கப்பட்டு விட்டார்.ஆனால் இவர் இதுவரை எங்கும் பணியமர்த்தப்படவில்லை காத்திருப்போர் பட்டியிலிலேயே தொடர்ந்து உள்ளார்.
மேலும் அவர் திருச்சியிலேயே இருந்து கொண்டு தொடர்ந்து அரசு சம்பளம் பெற்றுக்கொண்டு தான் இங்கு பணியில் இருப்பதாக காட்டிக் கொண்டு டிராவல்ஸ் ஏஜென்சி களுடன் சேர்ந்து தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தொடர்கின்றன..
ஒரு அரசு அலுவலர் தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியில் சேராமல் அரசு ஊதியம் பெறுவது எப்படி? அவரை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் ? ஒரு வேளை உண்மையாகவே அவருக்கு மேலிடத்தில் தொடர்பு உள்ளதோ …என திருச்சி வி்மான நிலைய வட்டாரத்தில் விவரம் அறிந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.