தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு
சர்வதேச விருது.
டெல்லியில் மத்திய மந்திரிகள் வழங்கினர்.
இன்ஸ்பைரிங் ஆப் யூத் ஐக்கான் தமிழ்நாடு” என்ற சர்வதேச அளவிலான விருது டெல்லியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித் என்ற, 23 வயது நிரம்பிய இளம் கவிஞருக்கு இன்ஸ்பயரிங் யூத் ஐகான் ஆஃப் தமிழ்நாடு விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதித்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களைத் டாப்நோட்ச் பவுண்டேஷன் விருதுகள் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 70 சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞரான ஜோசன் ரஞ்சித்திற்கு இவ்விருது கிடைத்து உள்ளது.
விழாவில் மத்திய மந்திரிகள் கிஷன் ரெட்டி, ராம்தாஸ் அத்வாலே, பகன் சிங் குலஸ்தே, ஜான் பர்லா மற்றும் நடிகர் சன்கி பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
கவிஞர் ஜோசன் ரஞ்சித், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி
“அன்பு உடன்பிறப்பே” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதுவரை இவர் 4 தமிழ்க் கவிதை நூல்கள், 3 ஆங்கில நூல்கள் என, 7 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் 140 நாடுகளில் அமேசான், பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இவர் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் நிரந்தர உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.