திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் வீழ்ந்து அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாப சாவு.
திருச்சியில்

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பரிதாப சாவு .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.தகவல் அறிந்து கண்டொன்மெண்ட் காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்பொழுது சாக்கடை கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதையடுத்து கோ அபிஷேகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு கண்டோன்மெண்ட் காவல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

