Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

0

'- Advertisement -

Ad banner

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு .

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கரூர் பைபாஸ் மேம்பாலம் அருகில் ராசி ஹாலில் இன்று நடைபெற்றது. புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்

அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் இரா.தமிழரசன், மாநிலத் தலைவர் பொன் தனபால், பொருளாளர் அப்துல் ஹமீது, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் பழனி ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.

மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் என் கார்த்தி,மாநில பீடி மற்றும் தீப்பெட்டி பிரிவு செயலாளர் சகாபுதீன், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஞானசேகர் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என் சிவக்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன், மாநில சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் ஆர்.எஸ். புல்லட் ஜான், பேரவை துணைச் செயலாளர்கள் ஜெயம் ஸ்ரீதர்,டி ஆர் சுரேஷ் குமார், மகளிர் அணி துணை செயலாளர் சுபத்ரா சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை தலைவர் அன்பழகன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா,மாவட்ட வழக்கறிஞர் அணிசெயலாளர் சி.முத்துமாரி,

டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பிளாட்டோ இணை செயலாளர் கௌதமன், பகுதி செயலாளர்கள் எம் ஆர்.ஆர். முஸ்தபா, கலிலுல் ரகுமான், புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், ஜான் எட்வர்ட் குமார், செல்லப்பா, எடத்தெரு பாபு, வசந்தம் டிஎஸ்எம் செல்வமணி,தில்லை முருகன், வாசுதேவன், சுரேஷ் குப்தா, பொன் நகர் மோகன், கருமண்டம் முத்துக்குமார், சிந்தை வி.பி. எஸ் மகாதேவன், இலியாஸ், உறந்தை முத்தையா மற்றும் எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி நத்தர்ஷா, வெல்ல மண்டி கன்னியப்பன், டைமன் தாமோதரன், வண்ணாரப்பேட்டை ராஜன், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் சேவியர், பேரூர் கண்ணதாசன், அன்பில் தர்மதுரை, ஒன்றிய செயலாளர்கள் எஸ் கே.டி.கார்த்திக், எஸ்.பி.முத்து கருப்பன், ஜெயக்குமார், எஸ் வி ஆர் ரவிசங்கர், பாசறை விவேக் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.