
திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது.
தில்லைநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20 ). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு பயின்று வருகிறார் பகுதி நேரமாக தள்ளுவண்டி கடையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார் இந்த நிலையில் சதீஷ்குமார் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்காக தில்லை நகர் அருகே தனது தள்ளுவண்டியை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு அவரிடம் பணம் கொடுக்காமல் தகராறு செய்தார் இது குறித்து சதீஷ்குமார் கேட்கவே அவரை அந்த வாலிபர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த சதீஷ்குமார் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 22 )என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

